இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
கம்போடியாவின் இரண்டு இராணுவ இலக்குகள் மீது F-16 போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. கம்போடிய பீரங்கித் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.
எல்லை மோதலின் பின்னணி: மே மாதம் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் கம்போடிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே பதட்டங்கள் நீடித்து வந்தன. இதற்கிடையே இன்று காலை பிரசாத் தா முயென் தோம் இந்து கோவிலுக்கு அருகில் தாய்லாந்து மற்றும் கம்போடியப் படைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை தொடங்கியது.
தாய்லாந்தின் சுரின் மாகாணத்திற்கும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே மாகாணத்திற்கும் இடையிலான இரு நாடுகளின் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தாய்லாந்து தரப்பில், “கம்போடிய படைகள் முதலில் ட்ரோன் அனுப்பி, பின்னர் துப்பாக்கிச் சூடு துவங்கின” என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கம்போடியா விளக்கம் அளிக்கையில், “தாய்லாந்துதான் வன்முறையை தூண்டிய ஆக்கிரமிப்பாளர்” என்று தெரிவிக்கப்பட்டது.
கம்போடிய முன்னாள் பிரதமர் ஹன் ஸ்னே “தாய்லாந்து சுமூகமான பிரச்சனைக்கு ஆயுத பதில் அளிக்கிறது. கம்போடியா எப்போதும் அமைதிக்கு விருப்பமுடைய நாடாக இருந்தாலும், இந்தத் தாக்குதலுக்கு வலுவான பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
Read more: இளைஞர்களே.. இனி இந்த இடங்களில் ரீல்ஸ் எடுக்க தடை.. மீறினால் கடுமையான நடவடிக்கை..!!