#Flash : ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..

6136430 df 1

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று ஒரே நாளில் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது..

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக மாறி உள்ளது.. குறிப்பாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இந்த கைது சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது தொடர்பாக, இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, அபராதம் விதிப்பதாகவும் செய்திகள் உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், மத்திய அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை..


இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.. டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் புத்தளம் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.. முதற்கட்ட விசாரணைக்குப் பின் மீனவர்கள் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்..

முன்னதாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்தது.. தற்போது பாம்பனை சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

RUPA

Next Post

ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ..

Tue Jul 29 , 2025
ndia Post offers several small savings schemes to help taxpayers save on income tax.
gaf33b380bd193274f5addd948a656320d4388d2113370a150 1736331295741 1738746786053

You May Like