கடந்த சில வாரங்களாக, காதல் தொடர்பான கொலைச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குடும்ப உறவுகள், நம்பிக்கைகள், காதல் என்று இருக்க வேண்டிய இடங்களில் வன்முறையும், விபத்தும் நடக்கிறது. அந்தவகையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வு மற்றுமொரு அதிர்ச்சியான சம்பவமாகும்.
ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்த ஷீபா மற்றும் தீபக், கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவந்தவர்கள். திருமணம் செய்யும் திட்டங்களுடன் பல ஆண்டுகள் உறவினை தொடர்ந்த இவர்களால், சமீபத்தில் ஓயோ ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று பார்த்த போது ஹோட்டல் அறையில் ஷீபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்படி, ஷீபா மற்றும் தீபக் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். தீபக் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் ஷீபா தொடர்ந்து திருமணத்தை வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட தகறாரில் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலின் போதே தீபக், ஷீபாவை கழுத்தை நெரித்து கொன்றதாக தொடக்க வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார். தீபக் கைது செய்யப்பட்ட நிலையில், ஷீபாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.