அக்ஷயா பற்றிய ரகசியம்.. நெப்போலியன் மறைத்தது ஏன்..? – பயில்வான் ரங்கநாதன் கேள்வி

WhatsApp Image 2025 07 30 at 10.48.00 AM

90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் 24 ஆவது வயதில் கடந்த வருடத்தில்தான் தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.


அந்த நேரத்தில் இந்த திருமண செய்தி பெரிதாக விவாதிக்கப்பட்டது. தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுக்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் மணப்பெண் அக்ஷயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாங்கள் விருப்பப்பட்டது தான் திருமணத்தை செய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் நெப்போலியன் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருந்தார். சமீப காலங்களில் பதிவிடும் வீடியோக்களில் அக்ஷயா இல்லாதது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் மருமகள் அக்ஷயாவை காரில் அழைத்து வந்த நெப்போலியன், “என் வீட்டில் குலசாமி மீண்டும் வந்துவிட்டது!” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில், நெப்போலியனின் உறவினர்கள் அக்ஷயாவிற்குப் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் அக்ஷயா, நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் தனது கணவர் தனுஷைக் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அந்த வீடியோவில், நடிகர் நெப்போலியன் தினம் தோறும் வீட்டுக்கு வருவர்கள் போவர்கள் என அவைரையும் வீடியோ எடுத்து பகிர்ந்து வந்தார். அதில் மருமகள் இல்லாதால், மருமகள் எங்கே என பலர் கமெண்ட்டில் கேட்டுவந்தார்கள். அக்ஷயா பல நாட்களாக அம்மா, அப்பாவை பார்க்காததால், அவர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என சென்றுவிட்டார்.

அதை நெப்போலியன் வீடியோவில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அதை சொல்லாமல் மறைத்துவிட்டார். ஏன் அதை மறைத்தார், மறைப்பதற்கு என்ன காரணம் என பல விஷயம் குறித்து பேசலாம். ஆனால், நெப்போலியனின் மனம் ஏற்கனவே ரணமாக இருக்கிறது. இதனால், அந்த விஷயம் பற்றி நெகட்டிவாக பேச வேண்டாம்” எனக் கூறிவிட்டார்.

Read more: ரஷ்யா நிலநடுக்கம் எதிரொலி.. சுனாமி ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள்.. முழு லிஸ்ட் இதோ..

English Summary

The secret about Akshaya.. Why did Napoleon hide it from him..? – Payilwan Ranganathan

Next Post

ஜப்பானை தாக்கிய சுனாமி.. 50 செ.மீ அளவுக்கு எழுந்த அலைகள்.. கரை ஒதுங்கிய 4 ராட்சத திமிங்கலங்கள்... வீடியோ

Wed Jul 30 , 2025
The Japan Meteorological Agency said a tsunami of up to 50 centimeters high hit the port of Ishinomaki, Japan.
photo 1679158608511 b831e3900bd0 1753846670819 1753846678582

You May Like