fbpx

மாஸ்…! TNPSC நேர்முகத்தேர்வில் புதிய நடைமுறை…! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி (A,B,C,D) முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அரசுப்‌ பணியாளர்களை தேர்வு செய்யும்‌ பணிகள்‌ தொடர்பான நடைமுறைகளில்‌ வெளிப்படைத்‌ தன்மை மற்றும்‌ நம்பகத்தன்மையை மேம்படுத்தும்‌ விதமாக அதன்‌ நடைமுறைகளில்‌ தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக நேர்முகத்‌ தேர்வுகளுக்கு (Oral Test) அனுமதிக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களின்‌ பெயர்‌, நிழற்படம்‌, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள்‌ மறைக்கப்பட்டு, அதற்குப்‌ பதிலாக விண்ணப்பதாரர்களை A,B,C,D முதலான எழுத்துக்களைக்‌ கொண்டு குறியீடு செய்து நேர்காணல்‌ அறைகளுக்குள்‌ (Interview Boards) அனுமதிக்கப்படுவர்‌.

இப்புதிய நடைமுறைகளுடன்‌ ஏற்கெனவே உள்ள Random shuffling முறையும்‌ சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால்‌ விண்ணப்பதாரர்கள்‌ மீது சார்புத்‌ தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்‌ நீக்கப்படுவதுடன்‌ வெளிப்படைத்‌ தன்மை அதிகரிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்‌படுகிறது.

Vignesh

Next Post

இந்திய எல்லையில் ஊடுருவும் பாக்.பயங்கரவாதிகள்!… ட்ரோன் மூலம் பயிற்சி!… உளவுத்துறை எச்சரிக்கை!

Sat Sep 16 , 2023
ட்ரோன் வாயிலாக இந்திய எல்லைக்குள் பயங்கரவாதியை அனுப்பும் முயற்சியை பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது போதைப் பொருட்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக நம் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஐம்மு – காஷ்மீர் பஞ்சாப் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் நடத்தப்படும் இந்த […]

You May Like