தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து பேசியது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம். இனி ஒருநாளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த முடிவு திமுகவுக்கு சாதகமானது.
திமுக இன்று பொருளாதார வளர்ச்சியில் இருப்பதற்குக் காரணம் பா.ஜ.க.வுடனான கடந்த கால கூட்டணி தான் என்றும், “திமுகவிற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான், ஆனால் இன்று அதே பா.ஜ.க.வை தீண்ட தகாத கட்சி என திமுக பேசுகிறது” என கடம்பூர் ராஜு குற்றம்சாட்டினார். இந்த பேச்சு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய முடிவுகளை நேரடியாக விமர்சிக்கின்ற வகையில் இருப்பதால், அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் வேலை.. ரூ.25 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?