திமுகவின் மூத்த தலைவரும் நகரமன்ற முன்னாள் தலைவருமான ஆர்.பால சுப்ரமணியன் காலமானார்.
கோவில்பட்டி தொகுதி என்றாலே இவர் தான் ஒரு காலத்தில் அடையாள முகம். அந்த அளவுக்கு கட்சியில் செல்வாக்கு படைத்தவர். வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் அவதியடைந்திருந்த அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) காலமானார். அவரது உடல் கோவில்பட்டியில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஆர். பாலசுப்ரமணியன், திமுகவின் அடிப்படை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளையும், தலைவர் மு. கருணாநிதியின் வழிமுறைகளை பின்பற்றி, கட்சிக்காக தீராது உழைத்தார். கோவில்பட்டி நகரமன்ற தலைவர் பதவியை ஏற்கும்போது, நகரத்தில் சாலை, மழைநீர் வடிகால், பொதுமக்கள் சேவைகள் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்துவதில் நேரடி பங்கு வகித்துள்ளார். அவரது மறைவுக்கு, திமுகவுடன் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read more: “விஜய் நினைத்தது நடக்காது..” பாஜக துணைத் தலைவர் குஷ்பு பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?