Flash: “ப்ளீஸ்.. என் அப்பா அம்மாவ விட்டு விடுங்க..” ஆணவ கொலை செய்யப்பட்ட கவினின் காதலி பரபர வீடியோ..!!

kavin

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவினுக்கு எனக்கும் என்ன உறவு என்று யாருக்கும் தெரியாது. எங்களை பற்றி தவறாக பேசாதீங்க என சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின். 25 வயதான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே கேடிசி நகரில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞன் என்பதால் பெண்ணின் தம்பி சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை.. கவினிடம் இது குறித்து பேச வேண்டும் என்று கூறி இரு சக்கர அழைத்து சென்றுள்ளார். கே டி சி நகர் அருகே அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகம் கை கால் என அனைத்து பகுதிகளிலும் பலத்த காயமடைந்த கவின் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையாளி சுர்ஜித் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்து. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. பாரபட்சமின்றி வெளிப்படையாக விசாரணை நடப்பதை உறுதி செய்வதற்காக சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு டிஜிபி அறிக்கை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இரவில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, காவல் துணை ஆணையர் ரத்தினகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சரவணனிடம் விசாரணை நடததினர். பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், “கவின் கொலைக்கும் என் அப்பா அம்மாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்களை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாத பலர் கவினுக்கும் எனக்குமான உறவு பற்றி தவறாக பேசுகிறார்கள்.. எங்கள் இருவருக்கும் என்ன உறவு என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியாமல்.. தெரியாமல் எதுவும் பேசாதீங்க..” எனக் கூறியுள்ளார்.

Read more: Flash: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 7 பேருக்கும் விடுதலை..!!

English Summary

Kavin’s girlfriend, who was killed in an honor killing, releases video and explains

Next Post

இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை.. கூலி படத்திற்கு வேற லெவல் புரோமோஷன்.. ரூ.1000 கோடி கன்ஃபார்மா?

Thu Jul 31 , 2025
கூலி படத்தின் புரோமோஷனுக்காக அமேசான் நிறுவனத்துடன் சன் பிக்சர்ஸ் கை கோர்த்துள்ளது. வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் […]
coolie jpg 1

You May Like