தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்தார்..
சமஸ்தான் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த செயலியை தயாரித்துள்ளது.. சுப்பிரமணியம் முத்துசாமி, நிர்மலா சுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கிறார்கள்.. இந்த சுப்பிரமணியம் முத்துசாமி யார் தெரியுமா? அவர் திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆவார்.. 2016 தேர்தலிலும் திருச்சியில் அதிமுகவின் வளர்மதிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்..
இவர் திருச்சியில் ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட பல கல்லூரிகளையும் நடத்தி வருகிறார். 2013-ம் ஆண்டிலேயே சுப்பிரமணியத்தின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.. இவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தலைவராக இருந்த போதே பாஜகவில் இருந்து வருகிறார்.. இவர் பொன். ராதாகிருஷ்ணனுடன் நெருக்கமாக இருக்கும் நபர் ஆவார்..
தவெகவின் கட்சியின் தரவுகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜக பிரமுகர் ஒருவர் இந்த செயலியை உருவாக்கி உள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் இந்த செயலியை உருவாக்கியதே பாஜக பிரமுகர் என்றால், விஜய்யின் தவெக பாஜக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவர் பாஜகவின் பி டீம் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.. ஆனால் கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் தொடர்ந்து கூறி வருகிறார்.. எனினும் அவர் பேசும் போதெல்லாம் பாஜகவை மென்மையாகயும், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதிமுக பற்றி விஜய் எதுவுமே பேசுவதில்லை.. மேலும் பாஜக – திமுகவும் மறைமுகமாக கூட்டணி அமைத்து கபட நாடகம் போடுவதாக விஜய் கூறி வருகிறார்.. ஆனால் தவெகவின் My Tvk செயலியை பாஜக பிரமுகரின் நிறுவனம் உருவாக்கி இருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது..
விஜய்க்கு நம்பகத்தன்மை கொண்ட நிறுவனம் இந்த செயலியை தயாரித்திருந்தால் எந்த சந்தேகமும் வந்திருக்காது.. தவெக செயலியை உருவாக்குதற்கு பாஜக ஏன் தேவைபப்டுகிறது.. மேலும் இந்த செயலியின் சர்வரை பனையூரில் வைத்து விட்டு, அதில் உள்ள தரவுகளை அணுகும் அதிகாரத்தை கமலாலயத்திற்கு கொடுப்பீர்களா எனவும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. உண்மையான கபட தாரி விஜய் தான் எனவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Read More : “விஜய் எம்.ஜி.ஆர். இல்ல.. எம்.ஜி.ஆர் ஜெயிச்சதுக்கே இது தான் காரணம்..“ திமுக எம்.பி. ஆ.ராஜா பரபரப்பு பேட்டி..