சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் “ தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டது.. இனி இந்த கூட்டணியில் இந்த குழு இடம்பெறாது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.” என்று அறிவித்தார்..
நேற்று ஒரே நாளில் ஓபிஎஸ் திமுக தலைவர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் , தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. விஜயின் தவெக உடன் ஓபிஎஸ் கூட்டணி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் கொடுத்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அவர் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதே நேரம் திமுக தவெகவுக்கு கதவை திறந்தே வைத்திருக்கிறார். குறிப்பாக திமுக உடன் கூட்டனியா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என சூசகமாக கூறியுள்ளார்.
Read more: திமுக உடன் கூட்டணி வைக்கும் தேமுதிக..? கழட்டி விடப்படும் மதிமுக.. ஸ்டாலின் புது வியூகம்