உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

வந்தே மாதரம் பாட தமிழக அரசாங்கம் மறுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 2025-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்”, 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதர்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை […]

கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக […]

தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம். விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பெட்ரோல் – டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல, சுற்றுச் சுழலுக்கி மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் […]

புதுக்கோட்டை, திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளைத் […]

ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க, இம்மாதம் 8,722 டன் கோதுமையை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் செய்த தாமதத்தால், 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில், […]

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31, 2025 வரை […]

இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில்: ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மேற்கு மதில்சுவர் அருகே கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரஅடி பரப்பில், நவம்பர் 14-ம் தேதி முதல் 2026 ஜனவரி 12-ம் தேதி வரை 60 நாட்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து […]