ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. எவ்வளவு தெரியுமா?

360 F 613229837 ohXkiDGLI6YYcm1310lsyik3sralKlQN

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.73,200 விற்பனை செய்யப்படுகிறது. 

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 20 குறைந்து ரூ.9,150க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.73,200 விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.123-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,23,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : பல ஆயிரம் கோடி மோசடி.. ED சம்மன்.. ஏற்கனவே திவாலில் இருக்கும் அனில் அம்பானிக்கு புதிய சிக்கல்..

English Summary

In Chennai today, the price of gold fell by Rs. 160 per sovereign, selling for Rs. 73,200.

RUPA

Next Post

"வயிறு வலிக்குது அம்மா.. என்னை கொன்னுடுவாங்க.." தாய்க்கு கர்ப்பிணி பெண் அனுப்பிய கடைசி மெசெஜ்..!!

Fri Aug 1 , 2025
I'm dying or they'll kill me: Pregnant Kerala woman's text to mother before suicide
kerala sucide 1

You May Like