இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக, தஞ்சாவூரில் உள்ள மஞ்சளாறில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், ஆகஸ்ட் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
ஆகஸ்ட் 1: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 3: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 4 & 5: கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், பிற டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 6 & 7: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read more: தாயின் இறுதி ஊர்வலத்தில் அழுதபடி நடனமாடிய ராபர்ட் மாஸ்டர்.. நெஞ்சை உடைக்கும் வீடியோ..!!