மின்னணு வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பயனர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சீரான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில், தனது அதிநவீன ‘ஏத்தர் ஹாலோ’ (Ather Halo) ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாதாரண ஹெல்மெட் அல்ல. உயர்தர தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய இந்த ஹெல்மெட், ஒவ்வொரு பயணத்தையும் சுகாதாரமாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
Wireless Charging: ஹெல்மெட்டை ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரின் பூட்டில் வைக்கும்போது தானாகவே சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. தங்கள் வீடுகளில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்தி ஹெல்மெட்டை சார்ஜ் செய்து கொள்ளலாம். இது கேபிள்கள் இல்லாத தொந்தரவற்ற சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது.
மியூசிக் & கால் கன்ட்ரோல்: பாடல் கேட்க, அழைப்புகளை ஏற்பதைத் தட்டச்சு செய்ய தேவையில்லை. உங்கள் கைகள் ஹேண்டில்பாரிலேயே இருந்தபடி கட்டுப்படுத்தலாம்.
ஹெல்மெட் டு ஹெல்மெட் கம்யூனிகேஷன்: பயணத்தின்போது பின்னால் இருக்கும் நபரிடம் சத்தமிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த அதிநவீன அம்சம் மூலம், ஹெல்மெட்டில் இருந்து ஹெல்மெட்டுக்குத் தெளிவான உரையாடலை மேற்கொள்ளலாம். உங்கள் இணைப் பயணிகளுடன் எளிதாகவும், தெளிவாகவும் உரையாட இது உதவுகிறது.
ம்யூசிக் ஷேர்: உங்கள் பயணங்களை மேலும் இனிமையாக்க, ஒரே இசையை இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பகிர்ந்து ரசிக்கலாம். சாலை இரைச்சல்களை தேவையான அளவிற்கு மட்டும் குறைத்து, தரமான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
DOT சான்றிதழ்: சர்வதேச மற்றும் தேசிய பாதுகாப்பு தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது, நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்: இந்த ஹெல்மெட் விபத்துகளைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்டுள்ளது. Automatic SOS Alert, விபத்து ஏற்பட்டால் ஹெல்மெட் தானாகவே SOS (உதவிக்கான அழைப்பு) எச்சரிக்கை அவசரகால தொடர்புகளுக்கு அனுப்பும். இதன் விலை ரூ.6,999 மட்டுமே.
ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட், பாதுகாப்பையும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஒருங்கே இணைத்து, ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பானதாகவும், வசதியாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட், இந்திய வாகனப்பயணிகளின் பயண கலாச்சாரத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: ஆரஞ்சு அலர்ட்.. கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இந்த மாவட்ட மக்கள் உஷராக இருங்க..!!