ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா தள்ளுபடி விலையில், கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு விற்பனை செய்து வருவது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. இதற்காக இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார்.
இது குறித்து ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரிமித்தவே் கூறியது, வரி விதிப்பு விஷயத்தில் ரஷ்ய-இந்திய இறந்து போன பொருளாதாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்பு ‛டெட்ஹேண்ட்’ எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி டிரம்ப் நினைத்து பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.இதனால் ஆத்திரமேடைந்த டிரம்ப், ரஷ்யா நோக்கி இரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி வைத்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை ரஷ்யா – அமெரிக்கா இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
Readmore: தமிழகமே..! இன்று முதல் “நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்..! வாட்ஸ் அப்பில் பரிசோதனை முடிவுகள்