உ.பி.யின் ஹாப்பூரில் உள்ள ஹோட்டலில் கணவரின் காதலியுடன் காபி குடிப்பதை பார்த்த மனைவி, அந்த பெண்ணை நடுரோட்டிலேயே கடுமையாக தாக்கினார்..
உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கள்ளக்காதலியை சந்திக்கச் சென்ற திருமணமான நபர் ஒருவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்தார். அந்த நபரின் மனைவிக்கும் அவரது கள்ளக்காதலிக்கும் இடையே நடந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்த மனைவி கோபமடைந்து, நடு ரோட்டிலேயே அந்த பெண்ணை அடிக்கத் தொடங்கினார். இந்த வாக்குவாதம் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது, இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது.
தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் அந்த மனைவிக்கு ஏற்பட்டுள்ளது… இதனால் வியாழக்கிழமை மதியம், மனைவி சந்தையில் இருந்தபோது, தனது கணவர் அவரின் கள்ளக் காதலி உடன் இருப்பதைக் கண்டார். அவர்களை பின்தொடர்ந்து சென்ற அவர், ஒரு ஹோட்டலில் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். மேலும் ஆத்திரமடைந்த மனைவி காதலியை தெருவில் இழுத்துச் சென்று தாக்கத் தொடங்கினார், அதே நேரத்தில் கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அருகில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தைப் பதிவு செய்து, வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ விரைவில் வைரலானது. மனைவி தனது கணவரின் கள்ளக்காதலியை அறைந்து உதைக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன..
🚨 हापुड़ : पत्नी ने पति को प्रेमिका के साथ पकड़ा 🚨
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 1, 2025
🆔 प्रेमिका संग होटल में कॉफ़ी पी रहा था पति
🕵️♂️ पत्नी ने प्रेमिका को कूटा, पति मौके से फरार
📍 होटल के बाहर पत्नी और प्रेमिका में मारपीट
📍 हाई वोल्टेज ड्रामा का वीडियो वायरल
📍 पिलखुवा कोतवाली क्षेत्र का मामला#Hapur… pic.twitter.com/LimJQAPAb4
இரண்டு பெண்களும் தெருவில் வாக்குவாதம் செய்வதை போலீசார் கவனித்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இன்ஸ்பெக்டர் பட்னிஷ் குமார் தெரிவித்தார். பொது இடங்களில் சண்டையிட்டதற்காக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.