மதுரை மாவட்டம் தவிட்டு சந்தையில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரை என்றாலே கோயில்களின் பெருமை கண்கூடாக தெரிவதுதான் முதல் நினைவு. ஆனால் அந்த மதுரையின் ஒரு புறத்தில் அமைந்துள்ள தவிட்டு சந்தை பகுதியில் வீற்றிருக்கும் திரௌபதி அம்மன் கோயில் புனிதம், பக்தி, மற்றும் சமூக ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறது.
புராண கதைகளின்படி, செய்யாத தவறுக்காக தனது கணவன் கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் மீதும், பாண்டிய நாடு மீதும் கடும் கோபம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது வரலாறு. அந்த நேரத்தில் மதுரை எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க இங்கு வாழ்ந்த மக்கள் பார்வதி தேவியை வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பார்வதி அசரீதியாக ஒழித்து பஞ்சபாண்டவர்களின் துணைவியான திரௌபதியை கைகாட்டினாள். பஞ்சபூதங்களையும் அடக்கியாளும் சக்தி கொண்டவள் திரௌபதி.
எனவே கண்ணகியின் கோபத்தால் ஏற்பட்ட பஞ்சபூத சீற்றங்களினால் மதுரை நகரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இவளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று பார்வதி தேவி கூறியதாகவும் அதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் கோயில் கட்டியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
இந்த கோயில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் குரு பகவானையும், வெள்ளிக்கிழமையில் திரௌபதி அம்மனையும், சனிக்கிழமையில் சனீஸ்வரர் என மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இங்கிருக்கும் சந்தோஷி மாதாவை வழிபட்டால் குழந்தை பேரு, சகல ஐஸ்வர்யம், ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகிறது மேலும் திருமண தடை நீங்கவும், தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலவும் பொதுமக்கள் இந்த கோயிலில் வழிபடுகின்றனர்.
Read more: ரூ. 6 முதலீட்டில் ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை.. போஸ்ட் ஆபிஸின் பால் ஜீவன் பீமா திட்டம் தெரியுமா..?