தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் TN Rising 2025 உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.. ரூ.33,554 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது, 45,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..
இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ 2024-ம் ஆண்டு சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாகி உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கடுமையாக உழைத்து வருகிறார்.. பல நாடுகளுக்கு சென்று வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு குவிக்கிறார்.. சொன்னதை செய்வோம் என்பது தான் நமது அரசின் குறிக்கோள்..
தூத்துக்குடியில் இரண்டாவது முறையாக இந்த உலக முதலீட்டாளர் மாநாடு நிகழ்வு நடைபெறுகிறது.. எப்போது வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்ற தயார் நிலையில் இந்த பூங்காக்கள் தயாராக உள்ளது.. தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க் தொடங்கப்பட்டுள்ளது.. மதுரையில் டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது.. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தமிழ் வளர்ச்சியை பார்த்து வருகிறது..
தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு விண்வெளிப் பூங்கா (Space Park) அமைக்கப்படும்.. இந்த பூங்கா விண்வெளி துறைக்கு தேவையான கருவிகளின் உற்பத்தி, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.. தூத்துக்குடியில் கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் அமைக்கப்படும்.. இதன் மூலம் கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.. முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கட்டமைப்புக்காக தூத்துக்குடி, திருநெல்வேலியில் ரூ.5 கோடி செலவில் புதிய வசதி மையம் தொடங்கப்படும்..
நெல்லையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மண்டல பிரிவு அமைக்கப்படும்.. நாங்கள் எடுத்து வரும் இந்த பெரு முயற்சிகளின் பலனாக, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,30,348 கோடி உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32, 28,445 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்துள்ளோம்.. அதுமட்டுமல்ல ரூ.. 2530 கோடு முதலீடு, 3600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க உள்ள உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்.. எந்த வித தொழிற்சாலைகள் அமைத்தாலும், அதற்கான திறன் சார்ந்த தொழிலாளர்கள் இங்கு இருக்கின்றனர்.. இந்த மாநாட்டிற்கு ரைசிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.. பொருத்தமான பெயர் தான்.. தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்..” என்று தெரிவித்தார்.
Read More : BREAKING| ஒரணியில் தமிழ்நாடு OTP விவகாரம்.. திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!! – உச்சநீதிமன்றம்