ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் இந்த புதிய திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
நடப்பு ஓய்வூதியத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அடிப்படையில், ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிப்புடன், மத்திய அரசு 14% பங்களிப்பு அளிக்கிறது. அந்த தொகை சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பின்னர் சந்தை வருவாய் மற்றும் முதலீட்டு வருமானத்தைப் பொறுத்தே ஓய்வூதிய தொகை அமையும். இதில், ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் பென்சன் ஏறக்குறைய 38% அளவில்தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, பழைய ஓய்வூதிய திட்டம் ஒரு ஊழியரின் கடைசி சம்பளத்தில் 50% நிலையான ஓய்வூதியமாக உத்தரவாதம் அளித்து வந்தது.
புதிய ஒருங்கிணைந்த திட்டத்தின் அம்சங்கள்: இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் நேரத்தில் கடைசி 12 மாத அடிப்படை ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், அவருக்கு ரூ.25,000 ஓய்வூதியமாக வழங்கப்படும். அதுடன் அகவிலைப்படியும் சேர்க்கப்படும். தற்போது 50% அகவிலைப்படி என்றால் அது ரூ.25,000 ஆகும். எனவே மொத்தமாக, ரூ.50,000 பென்சனாக வழங்கப்படும்.
UPS திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
- 25 ஆண்டுகள் பணியில் இருந்தால்: 50% அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி.
- 10–25 ஆண்டுகள் பணியில் இருந்தால்: பணிக்காலத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும் ஓய்வூதியம்.
- குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- புதிய திட்டத்தில் NPS-ஐ விட அதிகப் பென்சன் உறுதி செய்யப்படுகிறது.
- அரசு ஊழியர்களுக்கு அடிப்படை நிதி பாதுகாப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் NPS-இல் அடங்குகிறார்கள்; ஆனால் அவர்கள் UPS-க்கு மாறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
- மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறும் ஊழியர்களும் UPS பலன்களை பெற தகுதி பெறுகிறார்கள்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தற்போதைய ஓய்வூதிய சூழலில் நிலையான மற்றும் அதிகமான பென்சன் வழங்கும் திட்டமாக இருப்பதற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறைந்த வருமானம் பெறும் அரசு ஊழியர்களுக்கான சுற்றுச்சூழல் நிதி பாதுகாப்பு இது வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
Read more: பாலைவன தூசி துகள்கள் இந்திய வானிலையைத் தீர்மானிக்கிறதா..? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்