ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையில் மீண்டும் 5 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே சுமார் 108 கிலோமீட்டர் தொலைவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது… உள்ளூர் நேரப்படி 13:57 என்ற நேரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுல்ளது.. இந்த நிலநடுக்கம் கடலோரத்திலும் மிதமான ஆழத்திலும் ஏற்பட்டது என்று தகவல்கல் தெரிவிக்கின்றன..
சில நாட்களுக்கு முன்பு தான் ரஷ்யாவின் தூர கிழக்கில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பப் பகுதியை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பார்க்கப்படுகிறது.. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. ரஷ்யா, ஜப்பானில் சில இடங்களில் சுனாமி தாக்கியது..
பசிபிக் தட்டு நகர்ந்து வருகிறது, இது ரஷ்யாவின் தூர கிழக்கு கடற்கரையிலிருந்து கம்சட்கா தீபகற்பப் பகுதியை குறிப்பாக இதுபோன்ற நிலநடுக்கங்களுக்கு ஆளாக்குகிறது – மேலும் பெரிய பின்னதிர்வுகளை நிராகரிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறினர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது..
Read More : உலகின் மிகவும் ஆபத்தான இடம் இதுதான்.. சிறு தவறு கூட மரணத்தை ஏற்படுத்தும்.. எங்குள்ளது?