தகவல் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது. இணையதள பயனாளர்களிடம் சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ போன்ற பல AI பிளாட்ஃபாம்கள் விரிவாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மட்டுமே மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.
பயனாளர்கள், எந்தவொரு சிறிய சந்தேகம்கூட வந்தாலும், அதனை உடனடியாக சாட்ஜிபிடி மூலமாக தீர்த்துக்கொள்கிறார்கள். இதனால் சாட்ஜிபிடி தற்போது இணைய பயன்பாட்டாளர்களிடையே மனித உதவியாளராக மாறியுள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் ஒரு பெரும் சிந்தனைக் குறைபாடு உருவாகி வருவதாக மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 4 மாதங்களாக சாட்ஜிபிடி பயனர்களை ஆய்வு செய்த MIT குழு, முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது. அதில்: சாட்ஜிபிடியை தொடர்ந்து பயன்படுத்திய பயனர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% வரை குறைந்துவிட்டது. சில நிமிடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட வாக்கியங்களை கூட அவர்கள் நினைவில் வைக்க முடியவில்லை. இதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு இல்லாமல் எழுதும் பயனாளர்களுக்கு இந்தக் குறைபாடு இல்லையேனும் மிகவும் குறைவாக இருந்தது.
சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்கள், ஒரு பயனுள்ள கருவியாக இருந்தாலும், அதை மிகுந்த அளவில் சார்ந்திருப்பது மனித மூளையின் தானியங்கி சிந்தனை திறனை பாதிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “நாம் யோசிக்காமல் பதில்களை வெறும் தேடுதலாக மாற்றியவுடன், நம்மால் முடிவெடுக்க, நினைவில் வைக்க, உருவாக்க முடியாத நிலை ஏற்படலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Read more: கிரீன் கார்டு விதிகளில் வந்தது அதிரடி மாற்றம்.. இனி அமெரிக்காவில் செட்டில் ஆகுறது அவ்ளோ ஈஸி இல்ல..!!