கடன் பிரச்சனையை தீர்க்கும் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

bugulu vengateshwar

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் முதல் ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் உங்கள் பிரச்சனை தீரும்.


திருப்பதி ஏழுமலையான் என நாம் பிரமித்து வணங்கும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்தின் போது குபேரனிடமிருந்து பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் கடும் நெருக்கடியில் சிக்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் கிராமத்தில் அமைந்துள்ள புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில்.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் பெருமாள் தவம் செய்த புனித இடமாகக் கருதப்படுகிறது. இங்கு வழிபடும் பக்தர்களின் கடன் சுமை, பயம், பதட்டம், எதிரிகளின் தொல்லை மற்றும் பணக்கழிவு ஆகியவை அகலும் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு பக்தர்கள் திரள்கின்றனர். மூலவரான வெங்கடேஷ்வரர் இங்கே “புகுலு” அல்லது “குபுலு” வெங்கடேஷ்வராக அழைக்கப்படுகிறார். இது பதட்டம் அல்லது மனஅழுத்தம் என்ற அர்த்தம் கொண்ட சொல். அந்த நிலையில் பெருமாள் தவம் செய்த இடமெனக் கருதுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பாதாள குண்டு, சில்புர்குட்டா எனவும் அழைக்கப்படும் இத்தலம், பெருமாள் பாதம் பதித்த பாறை பிரதேசமாக அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வந்து எவர் ஒருவர் வழிபட்டாலும் அவர்களின் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை, பயம், பதற்றம், எதிரிகள் தொல்லை ஆகியவை நீங்கி, வாழ்க்கையே மாறி விடும் என்கிறார்கள். தென்னிந்தியாவில் உள்ள மிக பழமையான கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கோவிலில் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில், ஐதராபாத்தில் இருந்து 120 கி.மீ., தூரத்திலும், வாரங்கள் நகரில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பதி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இக்கோவிலுக்கு செல்வதற்கு ரயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.

Read more: ChatGPT பயன்படுத்துவதால் மனித மூளைக்கு பாதிப்பு.. 47% சிந்தனை ஆற்றல் குறையும்..!! – ஆய்வில் தகவல்

English Summary

Pukulu Venkateswara Swamy Temple, which solves debt problems.. Do you know where it is?

Next Post

UPI புதிய மைல்கல் சாதனை!. ஒரே நாளில் 70 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்து மாபெரும் வளர்ச்சி!

Wed Aug 6 , 2025
இந்தியாவின் UPI மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, ஆகஸ்ட் 2, 2025 அன்று ஒரே நாளில் 707 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பகிர்ந்து கொண்ட தரவு, இந்த தளம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 2023 முதல் அதன் தினசரி பயன்பாட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. அப்போது, இது ஒரு நாளைக்கு சுமார் 350 மில்லியன் (35 கோடி) பரிவர்த்தனைகளைக் கையாண்டது […]
UPI New rule 11zon

You May Like