Tn Govt: தமிழக அரசு வழங்கும் இலவச ChatGPT பயிற்சி வகுப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க…

Tn Govt 2025

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி வரும் 09.08.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்.


பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்:

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள், ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள், ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்.

கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் ருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் ரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும். ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு பங்கேற்பாளர்கள் 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 /9360221280. அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிமாற்றம் செய்தால் நடவடிக்கை.. சார்பதிவாளர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

Wed Aug 6 , 2025
Action will be taken if cash transfer exceeds Rs. 20,000.. Action order for sub-registrars..!!
register office

You May Like