இன்றைய டிஜிட்டல் உலகில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக ஊடக செயலிகளை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலி என்பது பெரும்பாலானோரின் அன்றாட தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான மத்தியானமாக அமைந்துள்ளது. மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அண்மையில், whatsapp மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விட்ட மெசேஜ்களை மெட்டா AI மூலம் சுருக்கி தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் WhatsApp, தற்போது “Guest Chat” எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகிறது. இது உண்மையில் பயனர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம், இனி WhatsApp இல்லாதவர்களுடனும் சாட் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
எப்படி வேலை செய்யும்? உங்கள் நண்பர் அல்லது உறவினரிடம் WhatsApp இல்லையென்றாலும், அவர்களது போன் நம்பர், மின்னஞ்சல் (Gmail) அல்லது சமூக வலைத்தள முகவரி மூலம், நீங்கள் Chat Invitation Link அனுப்பலாம். அந்த லிங்கை அவர்கள் திறந்ததும், பதிவு செய்யாமல் நேரடி சாட்டிங் செய்ய முடியும் – அதாவது “Guest” பயனராக.
ஆனால் Guest Chat வசதியில், போட்டோ, வீடியோ, ஆடியோ கோப்புகளை அனுப்ப முடியாது. Voice Call மற்றும் Video Call வசதிகளும் இல்லை. பாதுகாப்பு காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை என மெட்டா நிறுவனம் சார்ப்பில் என தெரிவிக்கப்படுகிறது. WhatsApp-இன் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் தளத்தின் அடிப்படையில், இந்த வசதி சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது. அதாவது பயனரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Meta நிறுவனம் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் இருந்தாலும், BETA டெஸ்டிங் முடிவடைந்தவுடன் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்றீங்களா..? கேன்சர் வராம தடுக்க இத செய்ங்க..! – டாக்டர் வார்னிங்



