கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
ஒருகால பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒருகால பூஜைத் திட்ட அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.
தமிழக அரசு சார்பில் கோயில் பணியாளர்களுக்கு இருசக்கர வாகன கடன் ரூ.20,000 வழங்கப்பட்டு வருகிறது. வாகனம் வாங்க இந்த தொகை போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை தொடர்ந்து அரசுக்கு வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து தற்பொழுது வாகனம் வாங்குவதற்கான கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Read More: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?