11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்..‌.! எங்கு பெறுவது தெரியுமா…?

school certificate 2025

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஒழுங்காக வராதா அரசு மருத்துவர்கள் 51 பேர் பணி நீக்கம்…! அமைச்சர் அதிரடி முடிவு…!

Thu Aug 7 , 2025
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]
doctors supended 1

You May Like