fbpx

சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கல்வி என்று வரும்போது, ​​நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் …

கடந்த 2011 க்கு முன்னர் திட்டமிடப்படாத மற்றும் மலைப்பகுதிகளில் கட்டப்பட்ட அனுமதி இல்லாத கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த ஆறு மாதம் கால அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 01.01.2011க்கு முன்னர் திட்டமிடப்படாத பகுதி மற்றும் மலையிட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை …

ஆசிரியர்களை மாவட்டத்துக்குள் பிற அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உபரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் கூடுதல் தேவையுள்ள அரசு …

கனமழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு …

தெலங்கானாவில் ஆசிரியர் ஒருவர், பள்ளி நேரத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்ட கிராம மக்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். இவர், அதே ஊரில் …

ஜூலை 2ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் வரும் 24ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், ஜூன் 25, 26ஆம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் …

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 30 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகரப் பகுதிகளிலும், கிராமப் …

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும் …

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான …

நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒரு கதை ஒரு …