“அரசியலிலும் விஜய்காந்தின் தம்பியாக விஜய்”!. கூட்டணி அமைத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்!. பிரேமலதா சூசகம்!

premalatha vijay 11zon

அரசியலுக்கு வந்தபிறகும் செந்துரபாண்டியின்(விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக்கொள்கிறார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.


வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 06) நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆணவ படுகொலைகள், லாக்கப் மரணம் போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இதை சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும். ஆவணப்படுகைகளை தடுக்க தனி சட்டம் இயற்றினால் அதனை தேமுதிக வரவேற்கிறது.

விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது. கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் அவரின் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது. சினிமாவில் விஜயகாந்த் படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், அக்கட்சியின் இரண்டாவது மாநாட்டை மதுரையில் விஜயகாந்த் பிறந்த ஊரில் அவரது பிறந்தநாள் நாளான ஆகஸ்ட் 25 அன்று நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், பின்னர் சில காரணகளால் மாநாட்டை 21ஆம் தேதிக்கு மாற்றினார். விஜய் தனது முதல் படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்துதான் அறிமுகமானார். இதனால், அரசியலிலும் அவரது பாணியையே பின்பற்றி அவரது இடத்தை விஜய் நிறப்ப முயற்சிப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிகவின் பொதுச்செயலாளரும் மறைந்த விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா, எந்த ஒரு தனிப்பட்டஅரசியல் கட்சிகளும் கேப்டன் விஜயகாந்த் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்தக் கூடாது என கூறியது மறைமுகமாக விஜய்யை சொல்கிறாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது.இருப்பினும் கூட்டணிக்கு வந்த பிறகு புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பிரேமலதா கூறியது விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான மறைமுக அறிகுறி என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Readmore: AI அரக்கன்!. 2027 முதல் மோசமான காலம் தொடங்கும்!. மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும்!. கூகுள் அதிகாரி கூறும் பகீர் தகவல்!

KOKILA

Next Post

சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இவர்களுக்கு அதிக ஆபத்து.. கவனம்..

Thu Aug 7 , 2025
உணவகத்தில் இருந்தாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி, பலர் சாப்பிட்ட உடனே, டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பிளாக் டீ, மசாலா டீ, சரியான முடிவாக உணர்கிறது. ஆனால் இந்தப் பழக்கம் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாப்பிட்ட உடனேயே தேநீர் குடிப்பது ஆரோக்கியமானதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும், செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் பால் டீ […]
p0k47n93 1

You May Like