ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை அன்று கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ஊராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போல் இந்த ஆண்டும் வரக்கூடிய ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை அன்று கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கூட்டங்கள், ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரம் போன்ற விவரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கிராம சபை கூட்டத்தில், தூய்மையான குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கியமான குடிமக்கள் தேவைகள் விவாதிக்கப்பட வேண்டும், உறுப்பினர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உத்தரவு அடிப்படையில், சுதந்திர தினத்தன்று ஊரக மக்கள் உரிமைகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு சிறப்புநாளாக கிராம சபை அமைய இருக்கிறது.
இதில் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் இதர வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கலாம். ஆகையால் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கிராமத்தின் வளர்ச்சிக்கான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
Read more: #Breaking : வரலாறு காணாத உச்சம்.. இன்று ரூ.75,000-ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்…