பொதுத்துறை வங்கியில் வெல்த் மேனேஜர் பதவியில் காலியாக உள்ள 250 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி ஒதுக்கீடு: எஸ்சி – 37, எஸ்டி – 18, ஒபிசி – 67, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 25, பொதுப் பிரிவினர் – 103 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: யூனியன் வங்கியில் உள்ள வெல்த் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தளர்வு உள்ளது.
கல்வி தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 2 ஆண்டு எம்பிஏ, மேனேஜ்மெண்ட் முதுகலை பட்டப்படிப்பு, PGDBA/PGDBM/PGPM/PGDM ஆகிய பிஜி டிப்ளமோ படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும். இப்படிப்புகளை கட்டாயம் 2 வருட முழு நேரப் படிப்பில் முடித்திருக்க வேண்டும். மேலும், NISM/IRDAI/NCFM/AMFI சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 3 வருடம் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்: யூனியன் வங்கியில் கிரேடு-2 கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.64,820 முதல் அதிகபடியாக ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி, கொடுப்பனைகள் கூடுதலாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: வெல்த் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் முறை வங்கியின் மூலம் நிர்ணயிக்கப்படும். ஆன்லைன் தேர்வு/ குழு கலந்துரையாடல், விண்ணப்பங்கள் தெரிவு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். விண்ணப்பதார்கள் குறைவாக இருப்பின் முதல் கட்ட தெரிவு முறையாக ஆன்லைன் தேர்வு பின்பற்றப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மிகக்குறைவாக இருப்பின் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு நபர்கள் https://www.unionbankofindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்டி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.177 செலுத்தினால் போதும்.
கடைசி தேதி: இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 25 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: மாதம் ரூ.20,500 வருமானம் தரும் சேமிப்பு திட்டம்.. வயதான காலத்தில் யாரையும் நம்பியிருக்க வேண்டாம்..!!