அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது..
அமலாக்கத்துறையின் (ED)சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல் ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது..
இசிஐஆர் எனப்படும், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர், 5000 பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் உங்களால் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி கொடுக்க முடிந்திருக்கிறது.. உங்கள் விசாரணை முடிவதற்கு 5, 6 ஆண்டுகள் ஆகும்.. நீண்ட ஆண்டுகள் நடத்தப்படும் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர், குற்றமற்றவர் என்று உறுதியாகும் பட்சத்தில், அந்த இழப்பீடுகளுக்கு யார் பதில் சொல்வது? இந்த வழக்குகள் குறைந்த அளவு தண்டனை பெற்று கொடுப்பதற்கு காரணம் என்ன?.. அமலாக்கத்துறை விசாரணை அதிகாரிகள் போதிய திறமையற்றவர்களாக இருக்கின்றனர்..
ஒரு வழக்கில் பலர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகின்றனர்.. அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது.. அமலாக்கத்துறை விசாரணையே நடத்தாமல் பல ஆண்டுகளாக குற்றவாளிகளை சிறையில் வைத்துள்ளது.. அமலாக்கத்துறை சட்டத்திற்குட்பட்டே செயல்பட வேண்டும்..” என்று காட்டமாக கருத்து தெரிவித்தனர்.. இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..