தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, அருவியில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், தண்ணீரின் வேகத்தை, தாக்குப் பிடிக்க முடியாமல், அருவியில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பகுதியில் வசித்து வரும், செய்யது மசூது என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்களோடு அந்த பகுதியில் ஃபேமஸாக இருக்கும் அடவி நைனார் அருவியில் குளிப்பதற்காக, சென்றுள்ளார். அப்போது, அவர் ஒரு பாறையில் நின்று நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென்று, தண்ணீரின் வேகம் அதிகரித்ததன் காரணமாக, அவர் கால் இடறி பாறையில் இருந்து, கீழே விழுந்து. அருவியில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், பதறிப் போயின. உடனடியாக அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று, போராடி பார்த்தார்கள். ஆனாலும், அவர்களால் அந்த இளைஞரை, காப்பாற்ற முடியவில்லை. இதன் காரணமாக, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி, அந்த இளைஞரின் உடல் ஒரு பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். பின்பு அந்த இளைஞரின் உயிரற்ற உடலை மீட்டனர்.
அதன் பிறகு அந்த இளைஞரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர். தங்களோடு, வந்த தங்களுடைய நண்பன் அருவியில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்ததை கண்முன்னே கண்ட அவருடைய நண்பர்கள், அந்த இளைஞரின் உயிரற்ற உடலை கண்டு கண்கலங்கி நின்றது அனைவர் மனதையும் சற்று கலங்கடித்தது.