இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. செப்.22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், ஜோஸ் ஹேசல்வுட், அலெக்ஸ் கைரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் இங்கிலிஸ், ஸ்பென்செர் ஜான்ஸன், மார்னஸ் லபுஷேன், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், மாட் ஷார்ட், ஆடம் ஜாம்பா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜடேஜா துணை கேப்டனாகியுள்ளார்.
மேலும் ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் தான். ஆனால், கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா (கேப்டன் ) விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார்.