இந்தியா முழுவதும் UPI செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரவு 7.45 மணியில் இருந்து gpay, phonepe, paytm போன்ற தளங்களில் பண பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் முழுமையடையாத பரிவர்த்தனைகள், கொடுப்பனவுகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி புகார் செய்துள்ளனர்.
இந்த UPI செயலிழப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), HDFC வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பரிவர்த்தனைகளைப் பாதித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இரவு 8:30 மணியளவில் 2,147 பயனர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 60 சதவீதம் பேர் பணம் செலுத்தும்போது சிக்கல்களைக் குறிப்பிடுகின்றனர். 29 சதவீதம் பேர் நிதி பரிமாற்றங்களில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 8 சதவீதம் பேர் பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் தெரித்துள்ளனர். மேலும் UPI செயலிழப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.