Paytm இன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL), கூட்டாளர் கட்டண சேவை வழங்குநர் வங்கிகளான Axis Bank, HDFC வங்கி, SBI மற்றும் யெஸ் வங்கிக்கு வாடிக்கையாளர்களை மாற்றத் தொடங்கியது. Paytm UPI வாடிக்கையாளர்கள் இதுவரை OCL இன் இணை நிறுவனமான Paytm Payments Bank Limited-யை கூட்டாளர் கட்டண சேவை வழங்குநர் வங்கியாகப் பயன்படுத்தி வந்தனர். அதனை ரிசர்வ் வங்கி தடை செய்தது. அதனைத்தொடர்ந்து, மார்ச் […]

FASTag: புதிய சேவையை பெறவேண்டுமானால் உடனடியாக FASTag கணக்கை மூட வேண்டும் என்று பேடிஎம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments செயல்பாட்டை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு ஏற்ப, Paytm Payments Bank (PPBL) புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை ஆர்பிஐ தடை செய்துள்ளது. மேலும், மார்ச் 15, 2024க்குப் பிறகு […]

UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம். யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்வாகித்து மற்றும் கண்காணித்து வருகிறது. உள்நாடுகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் […]

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதை பிப்ரவரி 29ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர் கணக்குகளில் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள் மற்றும் டாப்-அப்களை நிறுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. வாடிக்கையாளரின் கணக்குகளில் டெபாசிட் தொகை நிறுத்தப்படுவதற்கான தேதியை பிப்ரவரி 29, 2024 முதல் மார்ச் 15 வரை நீட்டித்துள்ளது. மேலும் பேடிஎம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள […]

Paytm Payments Bank மீதான RBI கட்டுப்பாடுகளால் ஏற்படும் செயல்பாட்டுச் சவால்களைத் தீர்ப்பதற்காக சில வாரங்களுக்கு புதிய கடன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் பேடிஎம் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவேஷ் குப்தா தெரிவித்துள்ளார். fintech நிறுவனமான Paytm தனது கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் செயல்பாட்டுத் தடைகளைத் தீர்ப்பதற்கும் புதிய கடன்களை மீண்டும் அனுமதிப்பதற்கும் வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. முன்னதாக பிப்ரவரி 1 ஆம் […]

யுபிஐ வழி பண பரிமாற்றங்களுக்காக இந்தியர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற செயலிகளைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு ஆர்பிஐ தடை விதித்த பிறகு, அதன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க இந்திய செயலியான பீம் ஒரு அற்புத சலுகையை அறிவித்துள்ளது. ₹750 வரை கேஷ்பேக் பெறுவதற்கான இந்த சலுகை வருகிற மார்ச் 31 வரை மட்டுமே கிடைக்க […]

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதைத் தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி முதல், பேமெண்ட்ஸ் பேங்க் கணக்குகள் அல்லது டிஜிட்டல் வாலட்டுகளில் புதிய வைப்புகளை பெறுவதை நிறுத்துமாறு பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. சரியான ஆவணங்கள் இல்லாமல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்-ல் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் காரணமாக […]

பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவை வழக்கம் போல் செயல்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற வங்கிகளுடன் இணைந்து மாற்றங்களை செய்து வருவதால் யுபிஐ சேவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைபிப்ரவரி 29க்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.. பேடிஎம் நிறுவனத்தின் […]

ஃபின்டெக் நிறுவனமான Paytm மீது மத்திய ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது தொடர்பாக அமலாக்க துறையின் முன் பல கேள்விகளை காங்கிரஸ் முன் வைத்துள்ளது. மேலும் பேடிஎம் தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன.? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது. கடந்த 7 வருடங்கள் இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் பேடிஎம் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மேலும் அந்த நிறுவனம் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிடுகிறது. […]

வங்கியில் ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஒரே பான் எண்ணில் 1000க்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களது வங்கி கணக்கை இணைத்தே பேடிஎம்(Paytm) தடைக்கான காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் […]