மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்திலும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 27ம் தேதி 14வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில் 15-வது தவணை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது…?
விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.பின்னர், முகப்புப் பக்கத்தில், ‘Farmers Corner’ என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அடுத்து, ‘New Farmers Registration’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுக்காக ஒரு பதிவு படிவம் இப்போது திறக்கப்படும். அதில் அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.
பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்ப்பது..?
நீங்கள் PM Kissan திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும். பின்னர் வலது பக்கத்தில் உள்ள ‘‘Farmers Corner’ என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து ‘Beneficiary Status’ என்பதை கிளிக் செய்யதால் ஒரு புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகிய ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் உங்கள் கட்டண நிலையை நீங்களே சரிபார்க்க முடியும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் தகவலை உள்ளிடவும். அதன் பிறகு, ‘Get Data’ என்பதைக் தேர்வு செய்தால் உங்களுக்கான விவரம் கிடைக்கும்.