விஜய்யை ஒருமுறை நேரில் சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் இளம்பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், போக்குவரத்து நடைபெறும் சாலையில் அந்தப் பெண் முதலில் அமர்ந்துள்ளார். பின்னர் அங்கேயே படுத்துக்கொண்ட அவர், தன்னை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற பெண் போலீசாரிடமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது, விஜய் […]

டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் தாஜ் மான் சிங் […]

‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026’ (Swachh Vayu Sarvekshan 2026) ஆய்வின்படி, தற்போது இந்தியாவில் லக்னோ தூய்மையான காற்று கொண்ட நகரமாகத் திகழ்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் இது 198 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் நொய்டா 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்கள் முறையே 32, 35 […]

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் உள்ள சர்வோதயா அரசுப் பெண்கள் பள்ளியில் பயின்று வந்த அன்வி என்ற 10 வயது சிறுமி, வகுப்பிற்குப் பாடப் புத்தகங்களைக் கொண்டு வரவில்லை என்பதற்காக வெயிலில் பல மணி நேரம் நிற்கவைத்துத் தண்டிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளியில் அளிக்கப்பட்ட இக்கடுமையான தண்டனையால் சிறுமி கடும் வெயிலில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர […]

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட […]

ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]