தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் பெண்ணின் பின்னால் இருந்து அவர் நெருங்கி வந்து அவரது தங்க நகையைப் பறிக்க முயன்றார். ஆனால் அவரால் நகையை பறிக்க முடியவில்லை. உடனடியாக அவர் அந்த பெண்ணிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.. நடந்ததை இன்னும் ஜீரணித்துக்கொண்ட திகைத்துப்போன பெண் அதிர்ச்சியில் நிற்கிறார்…
கொள்ளையில் தோல்வியடைந்த பிறகும், திருடன் தப்பி ஓடவில்லை. அதற்கு பதிலாக, அவர் அப்பெண்ணிடம் கொஞ்சம் பணம் கேட்டார், அந்த பெண் உடனடியாக அவருக்கு சுமார் 100 தாய்லாந்து பாட் பணத்தைக் கொடுத்தார்.
இந்த வீடியோ வைரலாகும் நிலையில், திருடனைப் பற்றி நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. ஒரு பயனர், “அவர் ஒரு நல்ல இதயம் கொண்டவராக இருக்கலாம், ஆனால் விரக்தியில் தவறாக இருந்தாலும் திருட முயன்றார். ஆனால் குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டார்.” என்று பதிவிட்டுள்ளார்..
மற்றொரு பயனர் , “இல்லை, அவர் செயினை பறித்துவிட்டார். ஆனால் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கு சென்றதும் அவர் வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியடைந்தார், நல்ல இதயம் உள்ளவர்கள் இன்னும் அங்கே உயிருடன் இருக்கிறார்கள் நண்பரே” என்று பதிவிட்டுள்ளார்..
வேறொரு பயனர் “எல்லோருக்கும் ஏதோ இருக்கிறது.. நாம் அவர்களுக்காக மன்னித்து பிரார்த்தனை செய்கிறோம்.. இறுதியில் எல்லாம் ஒரு முன்னேற்றத்திற்காக மாறும்..” என்று குரிப்பிட்டுள்ளார்.