மக்கள்…! தீபாவளி ரயில் கட்டணத்தில் 20% தள்ளுபடி…! எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது…?

irctc shares in focus as indian railways to hike passenger fares from july 1 1

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை வசதியானதாக மாற்றவும் ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறப்பு ரயில்கள் உட்பட இரு வழித்தடங்களிலும் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், தள்ளுபடி கட்டணத்தில் பண்டிகை பயண தொகுப்புத் திட்டத்தை சோதனை அடிப்படையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பின்வரும் விவரங்களின்படி அதில் உள்ள காலத்தில் தங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுக்கும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்:

இந்தத் திட்டத்தின் கீழ், பயண தொகுப்பிற்கு முன்பதிவு செய்யும் போது தள்ளுபடிகள் பொருந்தும். 2025 அக்டோபர் 13-ம் தேதி பயணத்திற்கு முன்பதிவு தொடங்கும் தேதி 14.08.2025 ஆகும். பயணச்சீட்டை முதலில் 13 அக்டோபர் 2025 முதல் 26 அக்டோபர் 2025 வரையில் புறப்படும் தேதியை முன்பதிவு செய்ய வேண்டும், பின்னர் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை இணைப்பு பயண அம்சத்தைப் பயன்படுத்தி திரும்பும் பயணத்துக்குப் பயணச் சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். திரும்பும் பயணத்தை முன்பதிவு செய்வதற்கு தற்போதைய 60 நாள் முன்பதிவு காலம் பொருந்தாது.

மேற்கூறிய முன்பதிவு இரு திசைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். திரும்பும் பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே 20% மொத்த தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு, செல்லும் பயணம் மற்றும் திரும்பும் பயணத்திற்கு ஒரே வகுப்பு, அதே பயணிகளுக்கு மட்டுமே. இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது. மேற்கண்ட திட்டம் ஃப்ளெக்ஸி கட்டணம் கொண்ட ரயில்களைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு ரயில்கள் (தேவைக்கேற்ப சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள்) உட்பட அனைத்து ரயில்களிலும் அனுமதிக்கப்படும்.

எந்தவொரு பயணத்திலும் இந்த பயணச் சீட்டுகளில் தேதி உள்ளிட்ட எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. சலுகை கட்டணத்தில் திரும்பும் பயண முன்பதிவின் போது தள்ளுபடிகள், ரயில் பயண கூப்பன்கள், வவுச்சர் அடிப்படையிலான முன்பதிவுகள், பாஸ்கள் அல்லது பிடிஓ (PTO)-கள் போன்றவை அனுமதிக்கப்படாது. பயணச் சீட்டுகளையும், திரும்பும் பயணச் சீட்டுகளையும் ஒரே தடவையில் முன்பதிவு செய்ய வேண்டும். இணைய (ஆன்லைன்) முன்பதிவு, அல்லது முன்பதிவு அலுவலகங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

Vignesh

Next Post

தொழில் முனைவோராக வேண்டுமா...? தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி..! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sun Aug 10 , 2025
வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வரும் 28.08.2025 முதல் 30.08.2025 தேதி வரை […]
Tn Govt 2025

You May Like