“தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என நினைத்துக் கொண்டு இபிஎஸ் சுவுண்ட் விடுகிறார்.. ஆனா பாவம் அவருக்கு இது தெரியல..” பங்கம் செய்த முதல்வர் ஸ்டாலின்..

stalin eps

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்..


மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்..

தொடர்ந்து பேசிய அவர் “ திராவிட மாடல் ஆட்சியில் தான் மேற்கு மண்டலத்தில் அதிக திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து செய்யப்படும்.. இன்னும் தொடர்ந்து நாங்கள் தான் செய்யப் போறோம்.. அதில் மாற்றமில்லை.. எந்த தைரியத்தில் எதிர்க்கட்சி தலைவர் இந்த பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியவில்லை.. ஆனால் அதிமுகவின் 2026 தேர்தல் தோல்வி இங்கிருந்து தான் தொடங்கப் போகிறது..

எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சுந்தரா ட்ராவலஸ் பஸ்ஸில் சென்று, பொய்களை கத்தி கத்தி பேசிக் கொண்டு வருகிறார்.. தனது அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு இவர் பேசுவதை மக்கள் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்கள் மத்தியில் பெரிய ஹிட்டாகி விட்டது.. அந்த வயிற்றெரிச்சலில் தான் திமுக அரசு மேலும் மேலும் ஸ்கோர் பண்ணி விடக்கூடாது என்பதற்காக, மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் போனாரு.. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ள நீதிமன்றம் இடமில்லை என்று சொன்ன நீதிமன்றம், சி.வி சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது..

இது உங்களுக்கு அவமானமா இல்லையா? பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் என ஒன்றிய பாஜக அரசே அறிக்கை கொடுத்துள்ளது.. இப்படி தொடர்ந்து அவருக்கு அடி மேல் அடி விழுது.. இதனால் விரக்தியின் உச்சத்திற்கே எதிர்க்கட்சி தலைவர் போய்விட்டார்.. அதனால் தான் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கு கூட மரியாதை தராமல், தொடர்ந்து தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து வருகிறார்..

அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.. இன்னும் இறங்கி பேசுங்க.. எங்கள் பணி மக்கள் பணி.. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என நினைத்துக் கொண்டு சவுண்ட் விடுறாரு.. ஆனால் பாவம் அவருக்கு தெரியவில்லை. அவரின் எந்த சதித்திட்டமும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் முன்பு எடுபடவில்லை.. இனியும் எடுபடாது.. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. இந்த நல்லாட்சி மேலும் தொடரும்.. உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.. திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழ்நாடு நிச்சயம் அடையும்.. இது உறுதி..” என்று தெரிவித்தார்..

Read More : ரூ.17 லட்சத்தை அள்ளி தரும் சூப்பர் ஹிட் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. இனி நீங்களும் கோடீஸ்வரர் தான்..!!

RUPA

Next Post

சிக்கனை விட அதிக புரதம் எந்த உணவில் இருக்கு தெரியுமா..? உடல் எடை, ரத்த அழுத்தம் கூட கட்டுக்குள் இருக்கும்..!!

Mon Aug 11 , 2025
உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன. முதலில், சிக்கனை விட மீன்களில் […]
Chicken 2025

You May Like