துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட சீரியஸாக உள்ள நிலையில் நடிகர் தனுஷ் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் சில வருடங்கள் கழித்து ஆளே அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று ரசிகர்கள் தேடும் நிலையில்தான் பல நடிகர்களின் நிலைமை இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் அபிநய்.
இவர் நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார் முதல் திரைப்படம் அபிநய்க்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ஒரு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
அதற்கு பிறகு 2000 வருஷத்திற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க வந்து தொடங்கியிருந்தார். அதிலும் சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார்
ஒரு கட்டத்தில் இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் போதிய வருமானமும் இல்லாததால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
வயிறு வீங்கி ஆல் எழும்பும் தோலுமாக இருந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தன்ர். எப்படி இருந்த இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் வருந்திய நிலையில் சினிமா பிரபலங்களும் சிலர் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அபிநய்யின் மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து நடிகர் தனுஷ் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. ” நண்பா.. மீண்டும் வந்துவிடுவாய்” என ஆறுதல் கூறியுள்ளார்.
Read more: திடீர் ட்விஸ்ட்.. NDA கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்..? நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!!