இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு அடுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி 2016 மே 1 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பு, முதலாவது சிலிண்டர், வைப்புத் தொகை உள்ளிட்ட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 10.33 கோடி உஜ்வாலா இணைப்புகள் உள்ளன. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதிகாரத்தை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் திட்டமாக இது திகழ்கிறது. இந்த திட்டத்தில் அரசு மிக முக்கியமான ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. மத்தியஅரசு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தை 2025-26 நிதியாண்டு வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் சுமார் 60% இறக்குமதியாக உள்ளது. அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்கத் தொடங்கிய போது வருடத்திற்கு 12 ரீஃபில்கள் கிடைத்தது. தற்போது ரூ.300 ஆக உயர்த்தி வருடத்திற்கு 9 ரீஃபில்கள் மட்டுமே தரப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த சில ஆண்டு எல்பிஜி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதாவது இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு இதுநாள் வரை பெண்கள் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை ஓராண்டில் 12 முறை பதிவு செய்து 12 சிலிண்டருக்கும் 300 ரூபாய் மானிய தொகை பெற்று வந்தனர், இனி ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த 300 ரூபாய் மானிய தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கும் இந்த மானியம் கிடைக்கும், அதேபோல 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களுக்கு இந்த மானிய தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read more: JOB: பரோடா வங்கியில் வேலை.. ரூ.93,960 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!