“தவெக தான் முதன்மை சக்தி என்பதை மீண்டும் உணர்த்துவோம் .. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்..” விஜய் பரபரப்பு அறிக்கை..

7il2srfg actor vijay ani 625x300 28 October 24 1

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் என்றும், முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. மேலும் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்…


வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சது தான்…

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறது தான் இந்த மாநாடு…

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : Flash: “பணி பாதுகாப்பு 100% உறுதி.. போராட்டத்தை கைவிடுங்கள்” – தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

English Summary

TVK leader Vijay has said that we will prepare for the state convention and will once again make the world aware that we are the primary force.

RUPA

Next Post

ஒரே ஆண்டில் 12 படங்கள்..!! உச்சம் தொடுவதற்கு முன் உயிரைவிட்ட நடிகை திவ்ய பாரதி..!! 19 வயதில் நிகழ்ந்த சோகம்..!!

Tue Aug 12 , 2025
சினிமா உலகில் பல திறமையான கலைஞர்கள், உச்சத்தை தொடுவதற்கு முன்பே காற்றில் கரைந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் தாக்கம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்த ஒரு இளம் நடிகையின் சாதனை இன்றும் மறக்க முடியாது. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் ஆகியோரால் கூட இத்தகைய வேகமான வளர்ச்சியை அடைய முடியவில்லை. மாதம் ஒரு படம் […]
Divya 2025

You May Like