ஆதார், பான், வோட்டர் ஐடி வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது!. மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி!

aadhar pan 11zon

ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து இந்திய குடியுரிமை கோருவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்ததை அடுத்து நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.


பாபு அப்துல் ரூஃப் சர்தார் என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், அவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை போலியாக வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், ‘1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் குடியுரிமை குறித்த கேள்விகளைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான சட்டமாகும். யார் இந்திய குடிமகனாக இருக்கலாம், எப்படி குடியுரிமையைப் பெறலாம், எந்தச் சூழ்நிலைகளில் அதை இழக்கலாம் என்பதை வகுக்கும் சட்டம் இது.

ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக மாற்றாது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண அல்லது சேவைகளைப் பெறுவதற்காக மட்டும்தான். சட்டப்பூர்வ குடிமக்களுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே இந்தச் சட்டம் ஒரு தெளிவான கோட்டை வரைகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது. இது இந்திய குடிமக்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சர்தாருக்கு ஜாமீன் மறுத்த உயர் நீதிமன்றம், அவரது ஆவணங்கள் மீது இன்னும் சரிபார்ப்பு நடந்து வருவதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் தலைமறைவாகக் கூடும் என்ற காவல் துறையின் அச்சம் உண்மையானது என்றும் குறிப்பிட்டது. சர்தார் தனது ஜாமீன் மனுவில், தான் இந்தியாவின் உண்மையான குடிமகன் என்றும், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க உறுதியான அல்லது நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: பழம்பெரும் நடிகை காலமானார்.. சோகத்தில் திரையுலகம்.. பிரபலங்கள் இரங்கல்..!

KOKILA

Next Post

ஆச்சரியம்!. 3 நாட்களில் 343 லிட்டர் பால் கறந்த பிரேசில் பசு!. உலக சாதனை படைத்து அசத்தல்!

Wed Aug 13 , 2025
பிரேசிலில் ஜிரோலாண்டோ இனத்தை சேர்ந்த பசு, மூன்றே நாட்களில் 343 லிட்டர் பால் உற்பத்தி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரேசிலின் ஜிரோலாண்டோ பசு இனம், ஹோல்ஸ்டீன் மற்றும் கிர் கால்நடைகளின் கலப்பினமாகும், இது நம்பமுடியாத அளவிற்கு அதிக பால் உற்பத்திக்கு நீண்ட காலமாக பிரபலமானது. ஜிரோலாண்டோ சராசரியாக 305 நாள் பாலூட்டும் காலத்திற்கு 3,600 லிட்டர் (950 கேலன்) பால் தருகிறது, ஆனால் சில பசுக்கள் ஒரு […]
Brazilian cow record 343 litre milk 11zon

You May Like