2026 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…! மத்திய அரசு தகவல்

award 2026

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.


2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கு நாளை கடைசி நாள். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளாகும். 1954-ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது ‘சிறப்புப் பணிகளை’ அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் புரிந்ததற்காக வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை.

பத்ம விருதுகளை “மக்கள் பத்ம” விருதாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், சுய பரிந்துரை உள்ளிட்ட பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் மற்றும் பத்ம விருதுகள் இணையப்பக்கத்தில் (https://padmaawards.gov.in)காணலாம். இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் இணையதளத்தில் உள்ளது.

Vignesh

Next Post

கதை மொக்கையா இருக்கு..!! பழைய ஃபார்மில் ரஜினி..!! கடைசி 20 நிமிடம் தான் மாஸ்..!! கூலி படத்தின் முதல் விமர்சனம்..!!

Thu Aug 14 , 2025
தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஒரு பெயர் தான் பேசப்படுகிறது என்றால் அது கூலி திரைப்படமாகத்தான் இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருக்கும் இந்த மாஸ் காம்போ, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் டிமாண்ட், முதல் நாளே ஹவுஸ் புல், ஒரே நேரத்தில் டிக்கெட் வசூல் சாதனைகள் என இப்படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனரும், […]
Rajini 2025

You May Like