நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை… பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு குட் நியூஸ்…!

pension 2025

நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் மத்திய அரசு நடத்த உள்ளது.


ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஏதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு 845 நகரங்களில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களில் 1.62 கோடி பேர் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தனர். நடப்பாண்டில் நாடு முழுவதும் 1,800-க்கும் கூடுதலான மாவட்டங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் (2,500 இடங்களில்) நவம்பர் 1 முதல் 30 வரை இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் நடத்தப்பட உள்ளதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஜூலை 30 அன்று ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த முகாம்கள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிக் கிளைகள், அஞ்சலக பேமெண்ட் வங்கிகள், ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், தொலைத்தொடர்புத் துறை, ரயில்வே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இணைந்து நடத்தப்பட உள்ளன.

மேலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்புத்துறையின் தலைமை கணக்கு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலர் ஸ்ரீனிவாஸ் நேற்று ஆய்வு செய்தார்.

Vignesh

Next Post

தெருநாய்கள் அப்பாவி..!! இப்படி திட்டம் போட்டு கொலை பண்ணுறீங்களே..!! நடிகை சதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

Thu Aug 14 , 2025
தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடிகை சதா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெருநாய்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக, குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து சுப்ரீம் கோர்ட் தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லி நகரத்தில் தெருநாய்கள் இல்லாத […]
Sadha 2025

You May Like