சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
உதவி புரோகிராமர் – 41
வயது வரம்பு: நீதிமன்ற தொழில்நுட்ப பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* உதவி புரோகிராமர் பதவிக்கு இளங்கலை அறிவியல் (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை அறிவியல் (BCA) உடன் 3 வருட சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* அல்லது விண்ணப்பதார்கள் பொறியியல் பட்டப்படிப்பு (BE., / B.Tech), கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு ( MCA), முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு (M.Sc) ஆகிய ஏதேனும் ஒரு படிப்பை முடித்து, 2 ஆண்டு சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* அல்லது முதுகலை பொறியியல் (M.E., / M.Tech) உடன் 1 ஆண்டு சாப்ட்வேர் டெவலப்மெண்ட் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சாப்ட்வேர் பொறியியல்/ செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேனிங்/ கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுடன் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை-13 கீழ் ரூ.35,900 முதல் அதிகபடியாக ரூ.1,31,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? உயர்நீதிமன்றம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.