fbpx

குட் நியூஸ்..!! அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை..!! அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பல மாவட்டங்களை சேர்ந்த மண்டல அலுவலர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமை ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு இணைப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அவர்களுக்கு வேறு வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தகுந்த கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்டு வருகிறது. அரசு வாக்குறுதி அளித்ததை போல ரூ.1000 உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும். மேல் முறையீடு செய்யப்பட்டும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Chella

Next Post

தொகுப்பாளினி கழுத்தில் மாலை போட்ட கூல் சுரேஷின் தற்போதைய நிலையை பாருங்க..!! கதறி அழுத வீடியோ..!!

Thu Sep 28 , 2023
சமீபத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து அவர் நடிப்பில் உருவான சரக்கு படத்தின் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ் முதல் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது வழக்கம் போல எல்லா பட விழாக்களிலும் கலந்து கொண்டு ஏதாவது ஒரு பொருளை வைத்து அந்தப் படத்தை பற்றி ப்ரோமோட் செய்வது கூல் சுரேஷின் வழக்கம். அதேபோல், இந்த சரக்கு திரைப்படத்தையும் ப்ரோமோட் செய்ய கையில் பாட்டிலுடனேயே வந்திருந்தார். அப்போது […]

You May Like