fbpx

”என்கிட்டயா லஞ்சம் கேட்குறீங்க”..!! வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஷால்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு, லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு, சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய படத்திற்கு அவரே லஞ்சம் கொடுக்க வேண்டியது இருந்தது குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பைக்கு ஒரு அதிகாரியை அனுப்பி இன்றே விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இதே போல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த தகவல் இருந்தாலும் அதை தெரிவிக்கும்படியும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த படம் மட்டுமல்லாமல் வேறு இதுபோன்று ஊழல் விவகாரங்கள் இருந்தாலும் அதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, CBFC விவகாரத்தை விஷால் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம், இது மிகவும் வருத்தத்தக்க விஷயம் என்றும், துரதிஷ்டவசமான இந்த குற்றச்சாட்டு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எந்த விதமான ஊழலையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மனைவி இருக்கும்போதே மாமியாருடன் உல்லாசம்....! மைத்துனர் எடுத்த அதிரடி முடிவு,தண்டவாளத்தில் கிடந்த உடல்.....!

Fri Sep 29 , 2023
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியை, சேர்ந்த கலியபெருமாள் என்ற இளைஞர், மனைவி இருக்கும்போதே மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது மாமியார் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, மாமியார், மருமகன் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கலியபெருமாளின் மனைவி ஹேமாஸ்ரீ கண்டித்துள்ளார். ஆனாலும், தன்னுடைய ஆசை நாயகியான மாமியாரை அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக, நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, […]

You May Like