ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் எது?. எங்கு இருக்கு தெரியுமா?

one railway station india state 11zon

உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 7,461 ரயில் நிலையங்களை நிர்வகித்து இயக்குகிறது, உத்தரபிரதேசத்தில் 1,173 ரயில் நிலையங்கள் உள்ளன, இது இந்தியாவில் அதிகபட்சமாகும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (689), பீகார் (768), மத்தியப் பிரதேசம் (550) மற்றும் குஜராத் (509) உள்ளன. 1850களில் பம்பாய் முதல் தானே(thane) வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. அன்று தொடங்கி சரக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட ரயில் பாதை பயணிகளை ஏற்றி செல்ல மாற்றப்பட்டது.


அதன் பின்னர் விரைவு ரயில், அதிவிரைவு ரயில், மெட்ரோ, புல்லட் ரயில் என்று பயந்துகொண்டு இருக்கிறது ரயில்வே தொழில்நுட்பம். அதோடு வடக்கே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக லட்சக்கணக்கான ரயில்கள் தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. சாலைகளில் இணைக்க முடியாத தூரங்களை எல்லாம் ரயில் தண்டவாளங்கள்தான் இணைத்து வருகின்றன. இப்படி இருக்கும் காலத்தில், ஒரு மொத்த இந்திய மாநிலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். மாவட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரயில் நிலையங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் வடகிழக்கில் ஒரு சிறிய மாநிலம் உள்ளது, அதில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மிசோரம் மாநிலத்தில் மொத்தமாக 11 மாவட்டங்கள் உள்ளன. சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் இந்த மொத்த மாநிலத்திலும் பைராபி(Bairabi) என்ற நகரில் மட்டும்தான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள யார் ரயிலில் போக ஆசைபட்டாலும் பைராபி நகருக்கு தான் கிளம்பி வர வேண்டும். நினைத்து பாருங்க.. சென்னை சென்ட்ரல் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கே ரயில் நிலையம் என்று சொன்னால் என்ன ஆகும். சும்மாவே சென்ட்ரல் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. மொத்தமாக வந்தால் மூச்சு நின்று விடும்.

ஆனால் மிசோரத்தில் அப்படி தான் நடந்து வருகிறது. மிசோரத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில் பயணிகள் இந்த ரயில் நிலையத்தில் தான் காத்திருந்து ரயிலை பிடிக்க வேண்டும். ரேசெர்வேஷன் செய்யாவிடில் நிலை என்ன ஆகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை! மாநிலத்தில் உள்ள ஒரே ரயில் நிலையம் என்பதால் இது நவீன வசதிகளை எல்லாம் ஒருங்கே கொண்டிருக்கும் என்று தப்பாக நினைவிடாதீர்கள்.

பைராபி ரயில் நிலையத்தில் முறையான வசதிகளும் எதுவுமே கிடையாது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. ரயில்கள் வந்து செல்வதற்கு நான்கு ரயில் வழித்தடங்கள் உள்ளன. அதுவும் 2016-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மிக சிறிய ரயில் நிலையமாகவே இருந்துள்ளது. 2016 இல் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் இந்த அளவுக்காவது முன்னேறியுள்ளது.

இத்தனை மக்களுக்கும் சேர்த்து ஒரே ரயில் நிலையம் இருக்கிறதே, என்று மிசோரமில் இன்னொரு ரயில் நிலையம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே சமீப காலத்தில் தான் பரிந்துரை செய்துள்ளது. மேலும் பைராபி ரெயில் நிலையத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.ரயில்வேயில் பரிந்துரையை அடுத்து பைராபி-சாய்ராங் ரெயில் பாதை திட்ட பணிகள் 51.38 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Readmore: தூங்குவதற்கு முன் இலவங்கப்பட்டை தண்ணீர் குடித்தால், இந்த 5 நோய்கள் நீங்கும்!. எப்படி தயாரிப்பது?

KOKILA

Next Post

ரூ.35 லட்சம் கோடி சொத்து! உலக வரலாற்றில் பெரும் பணக்காரர் இவர் தான்..! எலான் மஸ்க், அம்பானி, அதானிலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..!

Sun Aug 17 , 2025
மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]
Mansa Musa

You May Like